சூர்யா 45 படத்தில் இணையும் லப்பர் பந்து பட நடிகை.!
lubber bandhu movie actor joined surya 45 movie
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளார்.
சுமார் 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து இப்படத்தில் நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன் படி "லப்பர் பந்து" பட நடிகை சுவாசிகா 'சூர்யா 45' படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
English Summary
lubber bandhu movie actor joined surya 45 movie