மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. ஏக்நாத் ஷிண்டே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் தலைநகர் கவுஹாத்தியில் உள்ள சொகுசு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தமக்கு சுயேட்சைகள் உள்பட 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதனிடையே நேற்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். விரைவில் சட்டமன்றத்தைக் கூட்டி உத்தரவு தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் கொஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார்.  நாளை நடைபெறும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார். 

தற்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டு உள்ள நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்ற கூட்டத்தொடரில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதாக ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மேலும், அவருடன் 50 எம்.எல்.ஏக்களும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eknath shinde participate in tomorrow confidence vote


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->