தேர்தல் பிரச்சாரம் : பேரணி, வாக்கு சேகரிப்பு - அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.!
election corona rule in tn
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்து மாநில தேர்தல் ஆணையம் சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிகபட்சமாக வேட்பாளருடன் 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என, தேர்தல் கட்டுப்பாடுகளை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போது, கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,
வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களுடன் மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும்.
உள் அரங்கில் கூட்டங்கள் நடத்தும் போது, கொரோனா நோய் கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி, முன் அனுமதி பெற்ற பின்னர் நடத்த வேண்டும்.
சாலைகளின் ஓரமாக பிரச்சாரம் மேற்கொள்வது, பாதயாத்திரை செல்வது, பேரணி செல்வது, மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்களில் பேரணியாக செல்வது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் பரப்புரையின் போது வேட்பாளர் அவர்களின் வார்டுகளில் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். மற்ற இடங்களுக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடக்கூடாது.
துண்டு பிரசுரங்கள் கொடுத்து தேர்தல் பிரச்சாரம், வாக்கு சேகரிக்கும் போது முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். கையுறை அணிந்து இருப்பது கட்டாயம்" என்று, வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு வெளியிட்டுள்ளது.
முக்கியமாக கொரோனா நோய்த் தொற்றுக்கு பாதிப்பான வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை இணையதளம் மூலமாக, சமூக ஊடகங்கள் மூலமாக நடத்திக் கொள்ளலாம் என்றும், அந்த காரணம் கொண்டும் நோய் தொற்றுக்கு பாதிப்பான வேட்பாளர்கள் நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும் மாநில தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு வெளியிட்டுள்ளது.
மேலும் வேட்புமனுத்தாக்கல் மற்றும் வேட்புமனு பரிசீலனையின் போது சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போது அந்த கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
English Summary
election corona rule in tn