ஈரோடு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிக்கிறதா? அண்ணாமலை எடுக்கும் முடிவு என்ன?! சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal



ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? என்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை அதிமுக, தமிழக வெற்றி கழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. 

அதே சமயத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக நேரடியாக களம் இறங்கி, வேட்பாளரையும் அறிவித்துள்ளது. 

மேலும் நாம் தமிழர் கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? இல்லையா? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியேற்றியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode East By Election 2025 bjp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->