ஆதவ் அர்ஜுனாவின் குற்றசாட்டு! திமுக அமைச்சர் பரபரப்பு விளக்கம்!
EV Velu DMK Minister VCK Thirumavalavan Aadhav Arjuna
திமுக குறித்தும், துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் முதலவர் ஸ்டாலின் குறித்தும், திமுக அரசை மன்னராட்சி என்றும் விமர்சித்த காரணத்திற்காக, விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியிலிருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும் ஆதவ் அர்ஜுனா தனியார் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், மீண்டும் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததுடன், திமுக அமைச்சர் எவா வேலு, திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு திருமாவளவன் மறுப்பு தெரிவித்ததுடன், கண்டிக்கவும் செய்திருந்தார். இதற்கிடையே, நேற்று ஆதவ் அர்ஜுனா விசிக்காவிலிருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட திமுக அமைச்சர் எவா வேலு தெரிவிக்கையில், திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுக்கவில்லை. நட்பை தாண்டி சகோதரர் பாசத்துடன் பழகக்கூடியவர் திருமாவளவன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
EV Velu DMK Minister VCK Thirumavalavan Aadhav Arjuna