"எனக்கு பதவி ஆசை இல்லை" என சொல்கிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!!
EVKS Ilangovan said he have no desire for office
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பெரு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 20 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் ஆகும். கூட்டணி கட்சி தலைவர்கள் காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக பணியாற்றி எனக்கு வெற்றி தேடித் தந்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்பு படி நடந்து கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். தற்பொழுது தமிழ்நாடு சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வ பெருந்தகை இருந்து வருகிறார். அவரே தொடர்ந்து சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக செயல்படுவார். எனக்கு எந்த பதவி ஆசையும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
EVKS Ilangovan said he have no desire for office