'நீங்க மட்டும் எல்லா மாநிலத்து பேரையும் சொன்னீங்களா?!' - பட்ஜெட் மீதான உரையில் நிர்மலா சீதாராமன் காட்டம்..!! - Seithipunal
Seithipunal



பாராளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் கூடியது. இதையடுத்து நேற்று (ஜூலை 23) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த பட்ஜெட் பாரபட்சமாக உள்ளது. பல மாநிலங்களின் பெயர்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளின் மாநிலங்களுக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்கியுள்ளது என்று கூறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்தியா கூட்டணி எம். பி. க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 

இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், "பாஜக எந்த மாநிலங்களில் ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலங்களின் பெயர்கள் மட்டும் தான் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. பிற மாநிலங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்துள்ளனர். 


நான் மஹாராஷ்டிரா மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த மாநிலத்திற்கு ரூ. 76 ஆயிரம் கோடி மதிப்பிலான துறைமுகத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளோம். பாஜக அங்கு ஆட்சியில் இல்லையே. பட்ஜெட்டின் செலவுக் கணக்கில் திட்டங்கள் வாரியாக நிதி ஒதுக்கப் பட்டுள்ளது குறித்து தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. 

எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறுவது அரசை கேவலப்படுத்தும் செயல். முன்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்களில் மட்டும் அனைத்து மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட்டார்களா? பெயரைக் குறிப்பிடாததாலேயே அந்த மாநிலம் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக ஆகாது. அதை எதிர்க் கட்சிகள் புரிந்து கொள்ளவேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Finance Minister Nirmala Seetharaman Questioned Congress During Budget Speech


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->