'சேது சமுத்திர திட்டம்' பயனுள்ளதாக, பாதுகாப்பானதாக அமையும் - ஜி.கே. வாசன் எம்.பி,! - Seithipunal
Seithipunal


"சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய கடல்வழி போக்குவரத்துக்கே பயனுள்ளதாக அமையும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்பியுமான ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறுய்த்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய கடல்வழி போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக, பாதுகாப்பானதாக அமையும்.குறிப்பாக தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிக்க பயனுள்ள திட்டமாக அமையும். 

தற்போது இத்திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

எனவே, மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தினை தொடர்வதற்கும், முடிப்பதற்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் என்ற முறையிலும், தமாகா சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன்" என்று ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

G K Vasan say about sethu samuthira thittam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->