அரசியலில் திடீர் திருப்பம்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ..! அதிர்ச்சியில் ஆளுங்கட்சியினர்.!! - Seithipunal
Seithipunal


கோவாவில் வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ், கோவா பார்வர்டு கட்சி, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றனர். 

இந்நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான தலைமையான பாஜக அமைச்சரவையில் இருந்து அம்மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கழிவு மேலாண்மை துறை அமைச்சராக இருந்த மைக்கேல் லோபோ விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகம் மற்றும் சட்டமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதுகுறித்து மைக்கேல் லோபோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கலங்குட் தொகுதி மக்கள் எனது முடிவை மதிப்பார்கள் என நம்புகிறேன். நான் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். பாஜகவிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளேன். மற்ற அரசியல் கட்சிகளுடன் பேசி வருகிறேன். எங்களை பாஜக தலைமை பார்க்கும் விதத்தில் நான் வருத்தம் அடைந்தேன். 

கோவா பாஜகவில் மனோகர் பாரிக்கரின் பாரம்பரியம் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. அவருக்கு ஆதரவளித்த கட்சிக்காரர்கள் பாஜகவால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். மைக்கேல் லோபோ இன்று காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goa bjp minister michael loba resigns


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->