இந்திய அரசியல் வரலாற்றில் இது இரண்டாவது முறை! சாதனை படைத்த பாஜக!
Gujarat Elections Result 2022 BJP history win
182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 155க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களிலும், ஆம் ஆத்மி 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
பாஜகவின் இந்த மாபெரும் வெற்றியை, குஜராத் காந்தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி கொண்டு இருக்கின்றனர்.
குஜராத்தில் பிரமாண்ட தேர்தல் வெற்றியோடு 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றுகிறது. இதில் ஒரு இந்திய சாதனையும் அடங்கியுள்ளது.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை, தற்போது குஜராத் மாநிலத்தின் இந்த வெற்றி மூலம் பாஜக சமன் செய்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, கடந்த 15 வருடங்களாகவே ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜகவும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், இந்த முறை ஆளும் பாஜக ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க உள்ளது.
அம்மாநில தேர்தல் முன்னிலை நிலவரப்படி, காங்கிரஸ் - 39 (பெரும்பான்மைக்கு 35 இடங்கள்) இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக - 26, ஆம் ஆத்மி - 0, மற்றவை - 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
மேலும், குஜராத், ஹிமாசலப் பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் உடன், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மக்களவை தொகுதி மற்றும் 6 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஒரு இடத்தில் கூட பாஜக முன்னிலை பெறாமல் வாஷ் அவுட் ஆகியுள்ளது.
English Summary
Gujarat Elections Result 2022 BJP history win