விண்வெளியில் அதிக நேரம் 'ஸ்பேஸ்வோக்' சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்..! - Seithipunal
Seithipunal


நீண்ட நேரம் விண்ணில் நடந்த (ஸ்பேஸ் வோக்) பெண் என்ற என்ற சாதனை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்  மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 05-ஆம் திகதி 'ஸ்டார் லைனர்' விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.

இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 08 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில், அவர்கள் சென்ற 'ஸ்டார் லைனர்' விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

அதாவது குறித்த விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டது.

குறித்த இருவரும், பெப்ரவரி மாதமளவில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையிலேயே சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் 'ஸ்பேஸ் வோக்' செய்த பெண் என்ற சாதனை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.

அவர் மிகுந்த பாதுகாப்புடன் 05 மணி நேரம் 26 நிமிடங்கள் 'ஸ்பேஸ்வோக்' செய்துள்ளார். 09-வது முறையாக ஸ்பேஸ் வாக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ், இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்களை கழித்துள்ளார்.

இந்த சாதனையை செய்த சுனிதாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://x.com/Space_Station/status/1884976010883375433


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sunita Williams holds the record for the longest spacewalk in space


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->