யாருக்கு ஆதரவு? அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்! - Seithipunal
Seithipunal


மதவெறி சக்திகளை வீழ்த்த திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் எஸ்.எம். பாக்கர் விடுத்துள்ள அறிக்கையில், "சிட்டிங் எம்எல்ஏ-வாக இருந்த   திருமகன்  ஈவெரா மறைந்ததையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் எதிர் வரும் 27.2.2023 அன்று நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில்  அதிமுகவின் சார்பில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் என இரு தரப்பும் களமிறங்கும் நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் வேட்பாளரான இ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம் பாக்கரைத் தொடர்பு கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் தனக்கு ஆதரவை் வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதவெறி கொண்ட ஃபாசிச பாஜக தமிழகத்தில் தலையெடுக்கக் கூடாது என்ற நோக்கில் பிஜேபிமயமாகிவிட்ட அதிமுகவிற்கு எதிராக திமுக கூட்டணியை ஆதரித்து அதற்காக வாக்குகளை சேகரித்தது.

இப்போது இடைத்தேர்தலுக்கும் இதே நிலைப்பாட்டை  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கொண்டிருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பிஜேபி வசமாகிவிட்ட அதிமுகவை இடைத்தேர்தலில் வீழ்த்தும் நோக்கத்தோடு திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து வெற்றி பெறச் செய்வது என்று முடிவெடுத்திருக்கிறது.

தவிர,ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் என்பது 2024 மக்களவைத் தேர்தலுக்கான வெள்ளோட்டமாகவும் இருக்கிறது.ஆகவே தமிழ் மண்ணில் மதவெறி சக்திகளை வளர விடக்கூடாது என்பதால் திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்க வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது." 

இவ்வாறு அந்த அறிக்கையில் எஸ்.எம். பாக்கர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

INTJ support to cong


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->