காஞ்சிபுரம் திமுக பவள விழாவிற்கு அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு!...எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் பவள விழா மற்றும் திமுக ஆண்டுதோறும் நடத்தும் முப்பெரும் விழா ஆகியவை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று  நடைபெற்றது.

இதில், விழா மேடைக்கு முன்பாக ஒரு நார்காலியில் AI மூலம் கருணாநிதியும், மற்றோரு நார்காலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்தனர். மேலும், நாற்காலியில் அமர்ந்தபடியே  AI மூலம் கருணாநிதி திமுகவின் சாதனைகளையும், முதல்வர் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசினார். 


இந்த நிலையில், திமுக பவளவிழா பொதுக்கூட்டம் வரும் 28-ந்தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 28-ந்தேதி காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் காஞ்சியில் பவள விழா பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல்  காங்கிரஸ் டெல்லி தலைமைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Invitation to all party leaders for Kanchipuram DMK Coral Festival Do you know when


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->