யூடியூபர் இர்பான் செய்தது கொலை குற்றமா?....அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு விளக்கம்! - Seithipunal
Seithipunal


யூடியூபர் இர்பான் செய்தது கொலை குற்றமில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ரூ.13 கோடியில் கோவை அரசு மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன்  எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி புதிதாக வாங்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 4,500 ஆக உயர்ந்து உள்ளதாக தெரிவித்த அவர், மாவட்ட சுகாதார அலுவலர்கள் காலை, மாலை நேரத்தில் டாக்டர்கள் வருகை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், ஆய்வின் போது பணியில் இல்லாத மருத்துவர்கள்  உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவா் என்று கூறினார்.

பின்னர் இர்பான் மீதான நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர்,  இர்பானுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது ஒன்றும் கொலை குற்றமில்லை என்றும், இது பெரிய விசயமல்ல என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is youtuber irfan murder a crime minister subramanian sensational explanation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->