தகுதியே இல்லாத ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!
Jayakumar say Stalin Resign for law and order issue
அமைச்சரவை மாற்றுவது எல்லாம் வீண் வேலை, முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்து வீட்டுக்கு புறப்பட வேண்டும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
![](https://img.seithipunal.com/media/jayakumar press.jpg)
அதில், தமிழக அமைச்சரவையில் சில மாற்றம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியா கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "மொத்த அமைச்சரவையும் தான் மாற்ற வேண்டும். என்ன சில அமைச்சர்கள், முதலில் ஸ்டாலின் தான் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும்.
![](https://img.seithipunal.com/media/Minister Jayakumar.jpg)
அந்த அளவுக்கு அவருடைய நிர்வாக திறமை உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த இந்த அமைச்சரவை வீட்டுக்கு செல்ல வேண்டிய அமைச்சரவை தான்.
ஸ்டாலினை பொறுத்தவரை அவர் ஒரு நிர்வாக திறனற்றவர், நிர்வாகம் செய்யவே அவர் ஒரு தகுதி இல்லாதவர். அவர் ஒரு பொம்மை ரிமோட் முதலமைச்சர். நாட்டில் என்ன நடக்குது என்று தெரியாத ஒரு முதலமைச்சர்.
அமைச்சரவையை கலைத்துவிட்டு மீண்டும் தற்போது தமிழகத்தில் தேர்தல் வைத்தால், அதிமுக ஆட்சி தான் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்.
![](https://img.seithipunal.com/media/Minister Jayakumar.gif)
அந்த அளவுக்கு இந்த திமுக ஆட்சியால் வெறுத்துப் போய் உள்ளார்கள். விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை இப்படி பல்வேறு வகைகளில் மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கின்றனர்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
English Summary
Jayakumar say Stalin Resign for law and order issue