உக்ரைன்-ரஷ்ய போரில் அமெரிக்கா? அணு ஆயுத போர்? மனம் திறந்த அதிபர் ஜோபைடன்.!
Joe Biden say about Russian Ukrainian War
ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான் பரப்பில் பறக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் வருடாந்த உரையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆற்றினார். அப்போது பேசிய ஜோ பைடன், ரஷ்யாவின் போரை எதிர்கொள்ள மேற்குலக நாடுகள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் புடின் ஒரு சர்வாதிகாரி என்று தெரிவித்தா ஜோ பைடன், போரை தவிர்ப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் புடின் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், ரஷ்யா தனது அண்டை நாட்டில் ஊடுருவி இருப்பதன் மூலம், பிற நாடுகள் பாதிக்கப்படுகின்றனர். நடைபெற்றுவரும் போரில் அமெரிக்கப் படையினர் பங்கேற்காது என்றும் ஜோ பைடன் உறுதி அளித்தார்.
அமெரிக்க வான் வெளியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பதாகவும், இதன் மூலம் நாட்டிற்கு பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்றும் அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
போர் தொடுத்துள்ள ரஷ்யாவினால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஷ்ய அதிபர் புடின் மட்டுமே காரணம் என்றும் அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
இந்த போரில் நேரடியாக அமெரிக்கா கலந்து கொள்ளாது என்றும், இந்தப் போர் அணு ஆயுதப் போராக நடைபெறாது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதியளித்தார்.
English Summary
Joe Biden say about Russian Ukrainian War