திமுக அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கு., சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு திமுக அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ராமஜெயம் காலையில் நடைப்பயணம் சென்றவர், கைகால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்தார். 

இந்த கொலை குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ராமஜெயத்தின் மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 

இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை என்று, ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், தனது சகோதரரின் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த வழக்கை மீண்டும் மாநில அரசு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை கடந்த 10 ஆண்டுகளாக சிபிஐ போலீசாரும், சிபிசிஐடி போலீசாரும் மாறிமாறி விசாரணை செய்திருக்கின்றனர்.

ஆனால் கொலைக்கான நோக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை. நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் முழுமையான விவரங்கள் எதுவும் இல்லை" என்று தெரிவித்தது.

மேலும், சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பான விவரங்களை அந்த குழுவுக்கு சிபிஐ வழங்க வேண்டும் என்றும், இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் நியமித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k n nehru brother murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->