மேடையில் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு.! விக்ரம படத்தால் சிக்கலில் சிக்கிய கமல்.! - Seithipunal
Seithipunal


இதுவரை நான் ஒரு நடன உதவியாளர் ஆகவே நினைத்து வருவதாக நடிகர் கமலஹாசன் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஐசரி வேலனின் முப்பத்தி ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிகள் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட கமலஹாசன், உடனே புறப்படும் காரணத்தினால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அனைவரிடமும் மேடையில் வைத்து கைகூப்பி மன்னிப்பு கேட்டு புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் கமலஹாசனின் அந்த உரையில், "நடிகர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு சங்கே முழங்கு என்று நினைக்கிறேன், அந்த படத்திற்கான பாடல்கள், நான் ஏன் பிறந்தேன் படத்திற்கான பாடல்கள் இந்த அரங்கத்தில் எடுக்கப்பட்டதாக ஞாபகம் உள்ளது.

நான் அப்போது நடன உதவியாளர். என் மனசில் நான் எப்பவும் அப்படித்தான் இருக்கிறேன். நடுவில் போஸ்டர் எல்லாம் அடித்து, என்னை பெரிய நடிகர் என்று சொல்கிறார்கள். அதனை என்னால் நம்ப முடியவில்லை.

சந்தோசமாக உள்ளது. என்னுடைய பழைய நினைவுகளை நினைத்து பார்க்கும் போது. எவ்வளவு தூரம் வந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. 

அவை மரியாதைக்கு சற்றே புறம்பானது என்றாலும், எங்களுக்கு சென்சார் (விக்ரம் பட சென்சார்) குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இது குடும்ப வேலை. அதனால் இங்கு வராமல் இருக்க முடியாத காரணத்திற்காக, அங்கிருந்து எப்படியோ தப்பித்து வந்து விட்டேன். மறுபடியும் நான் அங்கு போக வேண்டும். இந்த அவை என்னை மன்னிக்க வேண்டும்" என்று கைகூப்பி கமலஹாசன் மன்னிப்பு கேட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal apology for vikram movie work


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->