காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் எப்படி இருக்கிறார் - காங்கிரஸ் நிர்வாகி பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டு 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இளங்கோவனை நேரில் நலம் விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன், மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் இருப்பதாகவும், 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு பெற்றால் போதும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 2 நாட்கள் கழித்து வீடுதிரும்புவார் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram district Congress admin speech about EVKS Elangovan health


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->