சிபிஐ அதிகாரிகள் அதிரடி.. நள்ளிரவில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது..! - Seithipunal
Seithipunal


எம்பி கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் திட்டத்தில் பணிபுரிவதற்கு 263 சீனர்களுக்கு முறைகேடாக ஒரே மாதத்தில் விசா வாங்கி கொடுத்ததாகவும், அதில் 50 லட்சம் ரூபாய் பணம் பரிவர்த்தனை நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தினர். அவரது இல்லத்தில் உள்ள தோட்டங்கள் மற்றும் வீட்டின் வெளி பகுதிகளில் முழுமையாக சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்துள்ளது. சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க, 50 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரியில் சிபிஐ அதிகாரிகள் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karthi chidambaram auditor arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->