கோவை பெட்ரோல் பாம் விவகாரம் - குண்டர் சட்டம் பாயும்!  - Seithipunal
Seithipunal


தலைமை செயலாளர் இறையன்பு உடன் காணொளி மூலம் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, கோவை மாவட்ட ஆட்சியர் செய்தவர்கள் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "ஒரு சிலர் சமூக வலைத்தள பக்கங்களில் தவறான செய்திகளை வெளியிட்டு, பதற்றமான சூழ்நிலையை உண்டாக்க முயல்கின்றனர்.

வெடிகுண்டு வீசி விபத்து ஏற்பட்டதாக சில தவறான செய்திகள் பரவி வருகிறது. அப்படியான எந்த ஒரு விபத்து சம்பவங்களும் நடைபெறவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இதுபோன்ற தனிப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்" என்று ஆட்சியர் தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர்கள் இதுபோன்ற சம்பவங்களில் இதுவரை ஒரு கைது நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மேற்கு மண்டல ஐஜி சுதாகர், "அனைத்து சம்பவங்களுக்குமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வுக்கு எடுத்துள்ளோம். குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் அந்த இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால், குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. கூடிய சீக்கிரம் கைது நடவடிக்கை எடுக்கப்படும். 

சமூக வலைத்தளங்களில் யாரேனும் தவறான தகவல்களையோ, அல்லது இரு சமூகத்தினர் இடையே பிரச்சனை உண்டாக்கும் வகையில் தகவலை பரப்பினால் அவர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அமைதியான அமைதி சீர்களுக்கும் வகையில் சம்பவங்களில் சமூகங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை கொண்ட சட்டம் பாயும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போது கோயம்புத்தூர் மாநகர பகுதியில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது. கோவை நகரத்துக்குள் வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai petrol bomb case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->