ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை! சவாலுக்கு தயாரா? சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!
KP Munusamy speech AIADMK Meeting DMK Mk Stalin
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது, "ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார்
தகவல் தொழில்நுட்பங்களை இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் கடுமையாக உழைத்தால், திமுக கூட்டணி கட்சியினர் நம்மை தொடர்பு கொள்ள தொடங்குவார்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 17 மாதமே உள்ளது, களத்தில் வெற்றி கனியை பறிக்க தயாராக வேண்டும். நிர்வாகிகளுக்கு பொருளாதார வசதி இல்லை என்றால், கடன் வாங்கியாவது அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதேபோல் அதிமுக தலைமை நிலைய செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "தனித்து நின்று திமுகவால் அதிமுகவை வெல்ல முடியுமா? சவாலுக்கு முதலமைச்சர் தயாரா? என்று சவால் விடுத்து பேசினார்.
English Summary
KP Munusamy speech AIADMK Meeting DMK Mk Stalin