நரேந்திர மோடி‌ இந்துவே கிடையாது.!! லாலுவின்‌ சர்ச்சை பேச்சு.!! - Seithipunal
Seithipunal


மாநிலம் பாட்னாவில் ராசிய ஜனதா தளம் சார்பில் நடைபெற்ற ஜன் விஷ்வாஷ் பேரணியில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பயணங்கள் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, உத்திரபிரதேசம் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் பீகார் மாநிலம் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் பிரதமர் நரேந்திர மோடி இந்துவே கிடையாது என சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார். எந்த ஒரு இந்துவும் தாய் இறந்த பிறகு மொட்டை அடிப்பது வழக்கம். 

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவ்வாறு செய்யவில்லை. ஏனென்றால் அவர் இந்துவே இல்லை. உங்களுக்கு தான் குடும்பம் இல்லையே... மொட்டை அடிக்காதது ஏன்‌? என லாலுபிரசாத் யாதவ் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lalu Prasad Yadav alleged Narendra Modi was not hindu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->