AI தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை கட்டமைப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு! - Seithipunal
Seithipunal



அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.  

இதற்கிடையே கடந்த மாதம் 29-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர்   30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் என பல்வேறு ஒப்பங்களை மேற்கொண்டு வருகிறார். 


இந்நிலையில் சாத்தியமான செயற்கை நுண்ணறிவு  முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து, BNY Mellon உடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டதாகவும், செயற்கை நுண்ணறிவின் (A.I) மாற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி, அந்த தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தைத் தழுவுவோம் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lets build the future with AI technology Chief Minister MK Stalins X record


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->