செந்தில் பாலாஜிக்கு ஜாமின்? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் அவருக்கு 7 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் 2 முறை அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் நேற்று அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரிப்பு காரணங்களால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் 13 பேர் கொண்ட மருத்துவ குழுவால் சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு அவர் மீண்டும் நேற்று மாலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தை மேற்கோள் காட்டி ஜாமின் வழங்க வேண்டும் என புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தாக்கல் செய்தபோது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும் அறிவித்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த செந்தில் பாலாஜியை காவலர்கள் வீல் சேரில் அமர வைத்து அழைத்துச் செல்லும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக கால்களில் இருந்து நரம்புகள் எடுக்கப்பட்டதால் அவருக்கு அடிக்கடி கால்கள் மறுத்துப் போவதாகவும், கால்களில் அதிக வலி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் செந்தில் பாலாஜிக்கு விரைவில் ஜாமீன் கிடைக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MadrasHC heared Senthil Balaji bail plea tomorrow


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->