கம்யூனிஸ்டுகளின் மீது ஏன் கோவம் வருது? விசுவாசமா? தமிழக அரசுக்கு சு. வெங்கடேசன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் 4வது வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் எம்பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இருதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தொழிற்சங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்கிறது சாம்சங் நிறுவனம். பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உரிமையையும், அரசியல் சட்டத்தையும் ஒரு சேர அவமதிப்பதற்கு எதிராக தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் வரவேண்டிய கோபம், அந்த சட்ட மீறலுக்கு எதிராக போராடுகிற கம்யூனிஸ்டுகளின் மீது ஏன் வருகிறது? 

இடதுசாரி தலைவர்களை கைது செய்துள்ள தமிழக காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது. பன்னாட்டு நிறுவனங்களின் மீதான விசுவாசத்தை வெல்லும் வலிமை உழைக்கும் மக்களிடம் என்றும் உண்டு" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai MP Condemn Kanchipuram Samsung Workers Protest CPIM leader arrested


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->