வடகிழக்கு பருவமழை: அவசர உதவிக்கு என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசின் இந்த செயலி பற்றி தெரியுமா? - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் - இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அவசரகால தேவைகளுக்கான மாவட்ட, மாநில கட்டுப்பாட்டு எண்கள் அளிக்கப்பட்டுள்ளது.

TN - Alert செயலியில் பருவநிலை தொடர்பான அனைத்து தகவல்களும் அறிந்து கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் அந்த செய்தி குறிப்பை தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2024 முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழைக்காலங்களில் கனமழை குறித்த தகவல்கள், வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN- Alert என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது. 

இந்த செயலியினை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பருவநிலை தொடர்பான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அவசர கால தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் : 1077 மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை எண் : 1070 ஆகிய இலவச அழைப்பு எண்ணினை தொடர்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North East monsoon TN alert app


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->