#Breaking : நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி.. ஆட்சியை தக்க வைத்தார் ஏக்நாத் ஷிண்டே.!!
maharashtra assembly trust vote eknath shinde win
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த இரண்டு வாரமாக அடுத்தடுத்த திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. இதனிடையே சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அசாமில் தாங்கினார்.
இதையடுத்து உத்தவ் தாக்கரே அரசை பெரும்பான்மையே நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார். அதன் பிறகு உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இதன் மூலமாக புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். துணை முதலமைச்சர் ஆக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தார் ஏக்நாத் ஷிண்டே. பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தற்போது ஷிண்டேவுக்கு 164 உறுப்பினர்களின் ஆதரவு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
English Summary
maharashtra assembly trust vote eknath shinde win