நடிகர் தனுஷ் - ஐஷ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு முன்னணி நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு வந்த இந்த தம்பதி சமீபத்தில் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். 

பின்னர் பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி விசாரணைக்கு வந்தப்போது இந்த வழக்கு மீதான விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராகாத நிலையில், கடந்த வாரம் ஆஜராகினர்.

அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வரும் 27-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, நடிகர் தனுஷ் - ஐஷ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேர்ந்து வாழ முடியாது என இருவரும் திட்டவட்டமாக கூறிய நிலையில், தற்போது இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டு உள்ளது.


ஜெயம் ரவி - ஆர்த்தி பேச்சுவார்த்தை:

நடிகர் ஜெயம் ரவி, அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரிடமும், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக  மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush aishwarya Divorse Case Court sensational order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->