தகுதியில்லாத அரசு ஊழியர்களை வெளியேற்றுவோம் - பரபரப்பை கிளப்பிய முதலமைச்சர்.!
mizoram chief minister announce unqualified employees remove
மிசோரம் மாநிலத்தில் கல்வித் துறையின் முன்முயற்சிகள் குறித்து ஐசால் நகரில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் லால்துஹோமா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசுத் துறைகளில் தகுதியில்லாத அனைத்து ஊழியர்களையும் விடுவிப்பது நல்லது என்று கருதுகிறோம். அவர்கள் இனி அரசு வேலைக்கு தகுதியற்றவர்கள். உரிய விதிமுறைகளின்படி அவர்கள் பணியில் இருந்து வெளியேறுவது நல்லது.
சிறப்பாக வேலை செய்யும் திறமையான ஊழியர்களை பணியமர்த்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தகுதிவாய்ந்த மற்றும் திறமையான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாநில அரசு ஊழியர்களின் பணிக்காலம் மற்றும் அவர்களின் சேவைகளை மறுபரிசீலனை செய்ய அந்தந்த துறைகளில் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்து திட்டங்களும் முறையாகவும் திறம்படவும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
mizoram chief minister announce unqualified employees remove