சினிமாவை விட நிஜ வாழ்க்கையில் சூர்யா&ஜோதிகா அருமையாக நடிக்கிறார்கள் - வைரல் ஆகும் ப்ளூ சட்டை மாறன் டிவிட்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையை சேர்ந்த ஆன்மீக பற்றாளர் கணேசன் என்பவர் தெரிவித்துள்ளதாக, ப்ளூ சட்டை மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட.. பள்ளி, மருத்துவமனைக்கு பணம்  தாருங்கள் என சொல்லாமல்... கோவிலுக்கு பணம் தருவதைப்போல பள்ளி, மருத்துவமனைக்கும் தாருங்கள் எனக்கூறி இருந்தால் சர்ச்சையே வந்திருக்காது.

தற்போது வந்த படத்தின் தோல்விக்கு இந்த சர்ச்சை பேச்சும் முக்கிய காரணம் என்பதை உணர்ந்து.. திடீரென கோவில் கோவிலாக செல்வதும், அதை ஊடகங்களுக்கு தெரிவிப்பதும் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால் ..நான் அன்று பேசியது தவறு என பகிரங்கமாக ஒப்புக்கொள்ள மட்டும் ஈகோ தடுக்கிறது.

ஒருவேளை இந்தப்படம் ஜெயித்திருந்தால்.. இந்த திடீர் பக்தியும், அதை விளம்பரப்படுத்தும் யுக்தியும் வந்திருக்காது.

சினிமாவை விட நிஜ வாழ்க்கையில் இவர்கள் அருமையாக நடிக்கிறார்கள்.

மக்களையும், கடவுளையும் ஏமாற்ற நினைப்பது  உண்மையான பக்தியாகாது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல ப்ரமோசனில் அளவுக்கதிமாய் பேசியது முதல்... தற்போதைய திடீர் ஆன்மீக பற்று வரை.. எல்லாமே நாடகம். எதுவுமே மக்களிடம் எடுபடாது.

தவறான பேசியதற்கு மன்னிப்பு கேட்பதும், உண்மையான மனமாற்றம் வந்து கடவுளை வணங்குவதும் மற்றுமே ஒரே தீர்வு" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Blue sattai maaran post about suriya Joythika Kanguva


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->