ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.!! காங்கிரஸ் கட்சியின் அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் அதற்கு முன்பாக பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. 

குறிப்பாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்களின் முதற்கட்ட தேர்தல் பணிகளை துவங்கி உள்ளன.

பாஜக தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச தேர்தலுகான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும், சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு விற்கப்படும், மகளிருக்கு மாதம் தோறும் ரூபாய் 1500 நிதியுதவி வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், மாதம்தோறும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும்" போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நாடாளுமன்ற பொது தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்தான அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna Kharge announced that old pension scheme will be implemented again


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->