மத்தியில் ஆளும் பாஜக கொலைகார கும்பல் போல செயல்படுகிறது - மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு.!
Manish Sisodia alleges ruling BJP
மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்காக மத்தியில் ஆளும் பாஜக கொலைகார கும்பல் போல செயல்படுவதாக சட்டப்பேரவையில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து தெரிவித்துள்ளதாவது,
"டெல்லி அரசின் கலால் திட்டத்தில் எந்த ஒரு ஊழலும் இல்லை. இந்த கலால் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் இல்லை. உலகம் முழுவதும் பாராட்டப்படும் டெல்லி அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சி.பி.ஐ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் அறிமுகப்படுத்தும் நல்ல திட்டங்களை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்கிறார். ஆனால், பிரதமரோ டெல்லி அரசின் திட்டங்களுக்கு எதிராகவே உள்ளார். மற்றவர்கள் செய்யும் நல்ல செயல்களைப் பார்த்து பிரதமர் பாதுகாப்பின்றி உணர்கிறார். அவரை போல பாதுகாப்பின்றி உணரும் ஒருவரை நான் பார்த்ததில்லை.
சி.பி.ஐ நடத்திய 14 மணி நேர சோதனையில் வழக்கம் போல் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. பாஜக மற்ற மாநில அரசுகளை கவிழ்ப்பதில் கொலைகார கும்பல் போல செயல்பட்டு வருகிறது. அவர்கள் இதனை கைவிட்டு பள்ளி மற்றும் மருத்துவமனைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினால் நன்றாக இருக்கும்". என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Manish Sisodia alleges ruling BJP