யூடியூபர் மாரிதாஸ் வழக்கில் சற்றுமுன் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
MARIDOSS CASE COURT ORDER
யூடியூபர் மாரிதாஸ் ஒரு நாளில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதுகளத்தூர் மணிகண்டன் மரணம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து மாரிதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட கருத்துக்களுக்காக போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜகவினர் போராட்டத்தில் இறங்கினர். மேலும், அவரை கைது செய்ய விடாமல் தடுக்கவும் முற்பட்டனர். இருப்பினும் அவரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
505 (1)(2), 124ஏ, 504,153ஏ பிரிவுகளில் வழக்குப் பதிந்தது செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற கிளை அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது. இருப்பினும், மாறிடாஸ் மீது மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மாரிதாஸை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
MARIDOSS CASE COURT ORDER