காலையில் திருமணம்..மதியம் வேட்புமனு தாக்கல் செய்த திருமண ஜோடி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி 162 வது வார்டில் பாஜக வேட்பாளராக களம் இறங்கும் வினோத்குமாருக்கு இன்று காலை திருமணம் நடந்த பின்பு மணக்கோலத்துடன் தனது மனைவியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marriage couples nomination in urban local election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->