அந்தோணிசாமி முதலியார்., ஜெய்பீம் சூர்யா செய்த திருட்டுத்தனத்தை உடைக்கும் தோழர்.! - Seithipunal
Seithipunal


எழுத்தாளரும் கம்யூனிச சித்தாந்தம் கொண்டவருமான மதிமாறன் தனது யு ட்யூப் பக்கத்தில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

"இந்த ஜெய்பீம் திரைப்படத்தின் பிரதான நபர் யார் என்றால், அந்த திரைப்படத்தின் வில்லன் எஸ்ஐ தான். அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருக்கிறாரோ அதை சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

மாறாக அந்த எஸ்ஐ சாராத ஒரு சமூகத்தை தொடர்புபடுத்தி பேசியதால் தான் இவ்வளவு சிக்கல் எழுந்துள்ளது. எஸ்ஐ நிகழ்காலத்தில் மரணத்தபோது அவர்களுடைய சாதிக்காரர்கள் அல்லது உறவினர்கள் அவர் பெயரைப் போட்டு 'அந்தோணிசாமி முதலியார்' என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் அவ்வளவு தெளிவாக.

90களில் எல்லாம் யார் பேருக்கு பின்னாலும் ஜாதி பேரை போடக்கூடிய பழக்கமில்லை. 80 களுக்கு முன்பே அது சென்றுவிட்டது. அப்படி இருக்கும்போது ஒரு போலீஸ் எஸ்ஐ ஆக இருக்கக் கூடியவர் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை போடுகிறார். 

அதுவும் அவர் ஒரு கிறிஸ்தவராக இருக்கும் அவர் பெயர் பின்னால் ஜாதி பெயரை போட்டு இருக்கிறார்கள்., என்பது இன்னும் தீவிரமான ஒரு அடையாளம். அது எல்லா வகையிலும் அவர் கிறிஸ்தவராக., ஒரு நல்ல மனிதராகவும் இல்லை. 

அவர் சாதிப் பெயரை பயன்படுத்தியிருக்கிறார். பேரோடு காட்டக் கூடிய விஷயம்., இவ்வளவு தீவிரமாக இருக்கும் போது., அதை அடையாளப் படுத்தாமல் வன்னியர் காலண்டரை காட்டியது முறையானது இல்லை என்பது முதன்மையானது.

இதற்கு ஏன் வன்னியர் காலண்டரை காட்டினார் என்பதற்கு முன்னாள் நீதிபதி சந்துரு ஒரு பேட்டியில் சொல்கிறார், 'அந்த காலகட்டத்தில் காட்டுவதற்காக அது பயன்படுத்தியிருக்கிறார்., அப்போது யாரோ அவருக்கு அந்த காலண்டரை கொடுத்து இருப்பார்கள். அதை வாங்கி மாட்டி இருக்கிறார்கள்' என்று சொல்கிறார். வன்னியர் காலண்டரை முதலியார் வீட்டில் மாற்றுவது என்பது நம்பும்படியாகவா உள்ளது. 

இந்த எஸ்ஐ அந்தோணிசாமி யாரை கொலை செய்தாரோ., அந்த நபர் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. அவர் ஒரு குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சமூகத்தையே மாற்றி காட்ட வேண்டிய அவசியம் என்ன?" என்று மதிமாறன் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MATHIMARAN SAY ABOUT JAI HIM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->