உத்தவ் தாக்கரே பிரதமரை சந்தித்து மன்னிப்பு கேட்டாரா? ஏக்நாத் ஷிண்டே சொல்வது என்ன?
MH Politics BJP Sivasena
உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்டதாகவும், பாஜகவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசி இருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பேசிய விவரம்:
"உத்தவ் தாக்கரே டெல்லி சென்று பிரதமரை சந்தித்து, தனது மீது உள்ள விசாரணைகளைத் தடுக்குமாறு மன்றாடினார்.
மோடியிடம் மன்னிப்பு கேட்டதோடு, பாஜகவுடன் மீண்டும் சேர்ந்துவிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், மகாராஷ்டிரா திரும்பியதும் திடீரென்று முடிவை மாற்றிக் கொண்டார்.
அதிகாரத்திற்காக சத்திரபதி சிவாஜியின் கொள்கையிலிருந்து விலகி, அவுரங்கசீப்பின் வழியில் காங்கிரசுடன் கை கோர்த்தார். சிவசேனாவின் அடையாளமாக இருந்த வில்-அம்பை மீட்டெடுத்தது நாங்கள்தான்!" என்றார்.
ஏக்நாத் ஷிண்டேவின் இந்த பேச்சுக்கு உத்தவ் தாக்கரே மறுப்பு:
"ஏக்நாத் ஷிண்டே வரலாற்றை திரித்து, தனது அதிகார தாகத்தை நியாயப்படுத்த முயல்கிறார். மகாராஷ்டிராவுக்கு அவர் என்ன செய்தார் என்பதைக் மக்கள் அறிவார்கள். சிவசேனாவின் அடையாளத்தையே பாஜகவுக்கு ஒப்படைத்தவர் ஷிண்டே" என தாக்கரே கண்டனம் தெரிவித்தார்.