மக்களவை சபாநாயகர் பதவி - குறி வைக்கும் கூட்டணி கட்சிகள் - என்ன செய்ய போகிறது பாஜக?!
NDA Alliance Parties Targetting Loksabha Speaker Position
மக்களவைத் தேர்தல் முடிந்து பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. குறிப்பாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளின் ஆதரவில் தான் மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமரின் பதவியேற்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் பிரதமர் மோடியுடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் வெளியான 4 நாட்களிலேயே பாஜக இந்தமுறை ஆட்சியமைத்துள்ளது. எந்த கட்சிக்கு அமைச்சர் பதவி வழங்குவது, எந்த இலாகா ஒதுக்குவது என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், என்டிஏ கூட்டணியின் இரு முக்கிய கட்சிகளான தெலுங்குதேசமும், ராஷ்டிரிய ஜனதாதளமும் தங்களுக்கு மக்களவை சபாநாயகர் பதவி வேண்டும் என்று பிரதமர் மோடியை நெருக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்சி சார்பில்லாமல் சபையை நடத்துபவர் தான் சபாநாயகர். மேலும் இது ஒரு நுட்பமான பதவி. மக்களவையில் விவாதிக்க வேண்டிய மசோதாக்களை இறுதி செய்யக்கூடியவர் சபாநாயகர் தான். எம். பி. க்களை பதவி நீக்க செய்யும் அதிகாரமும் சபாநாயகருக்குத் தான் உண்டு.
கூட்டணி அரசு அமையும்போது சபாநாயகர் பதவியே முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல் சாணக்கியர்களான சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் தங்களுக்கு இந்த சபாநாயகர் பதவியை குறி வைத்துதான் முக்கிய இலாகாக்களை விட்டு கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
English Summary
NDA Alliance Parties Targetting Loksabha Speaker Position