#BigBreaking || நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர்.!
neet issue tn governor feb
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது முதல், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மேலும் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத பள்ளி மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்த வருடம் கூட ஐந்துக்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த வாரம் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்போது அமைந்துள்ள திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மந்திரத்தை மறந்து தந்திரம் செய்து கொண்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைத்து ஒப்பேத்தி அவர்களின் வாயை அடைக்க முயன்றது.
மேலும், இந்த குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் வகையிலான மசோதா ஒன்றை கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார்.
நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உள்ளதாகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களை நீட்தேர்வு காத்து வருவதாகவும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.
English Summary
neet issue tn governor feb