திவாலான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள மக்களின் பணம் திரும்ப பெற்றுத் தர ஆணையம் அமைக்கப் படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!
Nirmala Seetharaman Budget Speech in Parliament
திவாலான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள மக்களுக்கு அவர்களின் பணத்தை திரும்ப பெற்றுத் தர ஆணையம் அமைக்கப் படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து நிதி அமைச்சர் ஆற்றிய உரையில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில்,
* பிரதமர் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
* ஆந்திராவுக்கு சிறப்பு நிதியாக ரூ. 15, 000 கோடியும், பீகாருக்கு சிறப்பு நிதியாக ரூ. 26, 000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* முத்ரா கடன் திட்ட வரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
* பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலத்திற்காக ரூ. 3 லட்சம் கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
* திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதம் ரூ. 5000 ஊக்கத்தொகை.
* நாடு முழுவதும் 12 தொழிற் பூங்காக்கள்.
* புதிய சாலை இணைப்புகளை மேம்படுத்த ரூ. 26, 000 கோடி ஒதுக்கீடு.
* திவாலான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள மக்களின் பணத்தை திரும்ப பெற்றுத் தர ஆணையம் அமைக்கப்படும்.
* மாநில அரசுகளோடு இணைந்து பல்வேறு நகரங்களை வளர்ச்சி மையங்களாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
English Summary
Nirmala Seetharaman Budget Speech in Parliament