மோடி காலில் விழ முயன்ற நிதிஷ் குமார் - என் டி ஏ கூட்டத்தில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal



பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளனர்.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று நடந்தது. அதில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும், வெற்றி பெற்ற எம். பி.க்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது, "ஐக்கிய ஜனதாதளம் பிரதமர் மோடியை ஆதரிக்கிறது. அவர் மூன்றாவது முறை பிரதமராகப் போவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் எப்போதும் அவருடன் இருப்போம். 

பத்தாண்டுகளில் பிரதமர் மோடி நாட்டுக்காக நிறைய செய்துள்ளார். எஞ்சியிருப்பதை இந்த ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றுவார். சிலர் தேவை இல்லாத விஷயங்களை பேசி சில இடங்களில் வென்றுள்ளனர். அவர்கள் நாட்டுக்காக எதுவும் செய்யவில்லை" என்று பேசினார்.

இதையடுத்து பேசி முடித்து வந்த நிதிஷ் குமார் பிரதமர் மோடியின் அருகில் வந்து அவரது காலில் விழ முயற்சித்தார். அவரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nithish Kumar Tried to Fall in Modis Leg in NDA Meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->