#BREAKING : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் டெல்லிக்கு பயணம்.. எதற்காக தெரியுமா.? - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்த சூழலில் இன்று பொதுக்குழு கூடியது.

ஆனால் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வில்லை. 50 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாதது இதுவே முதல்முறை ஆகும். கடைசியில் பெரும் சலசலப்பு மற்றும் குழப்பத்தோடும் பொதுக்குழு முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று இரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார். இரவு 9 மணியளவில் ஓபிஎஸ், ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரௌபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது உடனிருக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் உடன் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

O panneerselvam travelled to Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->