தமிழகத்தில் ஒருவருக்கு ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது.! சற்றுமுன் மா சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி!
OMICRON IN TAMILNADU
இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,
"நைஜீரியா நாட்டில் இருந்து வந்த பயணிகளில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவருக்கு கண்டறியப்பட்ட தொற்றில் செய்யப்பட்ட மரபணு சோதனையில் ஒரு மாற்றம் தெரியவந்தது.
இதனையடுத்து அவர் கிண்டி இன்ஸ்டியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது.
முதல் கட்ட தகவல்கள் அடிப்படையில் இதுவும் ஒமைக்ரான் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் இந்த நிலையில், பெங்களூருக்கு இந்த மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு நைஜீரியா நாட்டில் இருந்து வந்த பயணி ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மேலும், இவருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கும் மரபனு மாற்றம் உள்ள தொற்று இருப்பதால், அவர்களுக்கும் பாதிப்பு இருக்கலாம் என்று தெரிகிறது" என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.