#BigBreaking || அதிமுகவை எடப்பாடி கைப்பற்றுவதை தடுக்க.., உட்சபட்ச ஆயுதத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்.!
OPS ADMK SC FOR EPS
அதிமுக பொதுக்குழு கூட்டம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. வந்த கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கோஷங்களை உறுப்பினர்கள் எழுப்பினர். மேலும், எடப்பாடி பழனிசாமி பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுக்குழுவில் நிறைவேற்ற கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அறிவித்தார். அதேசமயம் தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன், பொதுக்குழுவின் மூலம் நிரந்தர அவை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூடும் என அறிவித்தார்.
ஓபிஎஸ் தரப்பில் இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும் அடுத்த நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்தை முடக்கும் நடவடிக்கைகளை ஓபிஎஸ் தரப்பு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பொதுக்குழுவை முடக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால், தனது கருத்தையும் கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.