ஓபிஎஸ் - சபரீசன் திடீர் சந்திப்பு! அதிரும் இணையம்!
OPS sabareesan meet
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உடன், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையேயான பரபரப்பான ஆட்டம் நடைபெற்றது.
![](https://img.seithipunal.com/media/gfhnjrfjrt.jpg)
இந்த ஆட்டத்தை காண நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவம், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் மைதானத்திற்கு நேரில் வந்து கண்டு களித்தனர்.
இதே போல் அரசியல் பிரபலங்களும் இந்த ஆட்டத்தை கண்டு ரசித்தனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி இன்றைய ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.
![](https://img.seithipunal.com/media/DAGAERHG.jpg)
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அவர் தொகுதிக்குட்பட்ட மாணவ மாணவிகளுடன் இன்றைய ஆட்டத்தை கண்டு ரசித்தார்.
மேலும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வமும் இன்றைய ஆட்டத்தை மைதானத்திற்கு நேரடியாக வந்து கண்டுகளித்தார்.
![](https://img.seithipunal.com/media/fgjtrjk.jpg)
அப்போது ஓபிஎஸ், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரிசனை நேரில் சந்தித்து பேசி இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே திமுகவின் பி-டீமாக ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பை கடுமையாக விமர்சித்து அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.