#BigBreaking || டெல்லியிலிருந்து வந்ததுமே ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்.! நாள் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு.! அம்மாவாசை நாளில் பிள்ளையார் சுழி.! - Seithipunal
Seithipunal


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் ஒரு ஒற்றை தலைமை வரவேண்டும் என்ற குரல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

மேலும் அந்த ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக முழு கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும் என்றும் பெரும்பாலான தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற ஓ பன்னீர்செல்வம், இன்று மாலை சென்னை வந்தடைந்தார்.

சென்னை வந்தடைந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தப் பயணம் மகிழ்ச்சியாக முடிந்ததாக தெரிவித்தார். 

இந்நிலையில், சற்று முன்பு ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி அமாவாசை தினத்தன்று ஓ பன்னீர்செல்வம் இந்த ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops start planing and meeting for admk eps issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->