#BREAKING :: பாஜகவின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி..!! பாஜகவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து..!! - Seithipunal
Seithipunal


குஜராத் சட்டமன்ற பொது தேர்தலில் முடிவுகள் வெளியாகி உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து ஏழாவது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சி அமைப்பதால் பல்வேறு கட்சி அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் குஜராத் மாநிலத்தின் வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் "மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மற்றும் பாரதிய ஜனதா தலைவர் ஜெ.பி நட்டா அவர்களுக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து ஏழாவது முறையாக மகத்தான வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் மாநில வரலாற்றில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி" என தன் ட்விட்டர் பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS wished Victory for BJPs good governance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->