விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத அரசு தான் நரேந்திர மோடி அரசு - ப.சிதம்பரம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் பேசியதாவது, பாஜக சொல்வதை அப்படியே கேட்பவர்கள் தான் அதிமுக என விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய அரசின் கொள்கை வேறு என்றால் அதிமுக அங்கு ஏன் கூட்டணியில் இருக்கிறது என்று தெரியவில்லை பாஜகவின் எந்த கொள்கையில் நீங்கள் உடன்படுகிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் இரண்டு கட்சிகளும் அனைத்து கொள்கைகளும் ஒன்றிணை வேண்டும் என்று நான் கூறவில்லை ஆனால் ஒரு சில கொள்கைகளை கருத்து வேறுபாடு இருக்க வேண்டும். அதிமுகவின் தலைமையாக பாஜக செயல்படுகிறது. அதேபோல் பாஜக என்ன சொன்னாலும் அதை அதிமுக மறுக்காமல் கேட்டுக் கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்

மேலும், சீனா, ரஷ்யா, எகிப்து போன்ற நாடுகளில் விமர்சனத்தை சகித்துக் கொள்ள நாடுகளாக இருந்த நிலையில் தற்போது இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. அந்த வகையில் விமர்சனத்தை கூட சகித்துக் கொள்ள முடியாத அரசாகத்தான் மோடி தலைமையிலான அரசு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

P chidambaram speech about BJP and ADMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->