திமுக எம்எல்ஏ.,வை ரவுடியா நீங்க என்று கேட்ட நிலையில், திமுக கவுன்சிலருக்கு கத்திக்குத்து!
Paramakudi DMK MLA councilor issue
ராமநாதபுரம் திமுகவின் உள்கட்சி மோதல் கத்திகுத்துவரை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பரமக்குடிக்கு வர இருந்தார்.
அப்போது அவரை வரவேற்க பரமக்குடி ஐந்தாவது வார்டு தி.மு.க கவுன்சிலர் பாக்யராஜ் பேனர் ஒன்றை வைத்துள்ளார்.
அந்த பேனரில் பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் படம் இடம் பெறவில்லை என்று தெரிகிறது. எம்.எல்.ஏ.,வின் உறவினர் விக்னேஷ் என்பவர், கவுன்சிலர் பாக்யராக்கு போன் செய்து மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த மிரட்டல் குறித்து, எம்.எல்.ஏ முருகேசனை தொடர்பு கொண்ட பாக்யராஜ், "என் சொந்த காசில் அடிக்கும் பேனரில் உங்கள் படத்தை ஏன் போடவேண்டும். என்னை கேள்வி கேட்க விக்னேஷ் யார்" என்று கேட்க.
அதற்க்கு எம்.எல்.ஏ முருகேசன், "என் புகைப்படம் போடாமல் நீ பேனர் வைத்துவிடுவியா? நான் பார்க்கிறேன். நீயா நானா" என்று கேள்வி கேட்க. அதற்க்கு கவுன்சிலர் பாக்யராஜ், "நீங்க ரவுடியாக இருப்பீர்கள் போல. தெரியாமல் உங்களிடம் பேசிவிட்டேன்" என்று சொல்லும் இந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது (இந்த ஆடியோ குறித்து எம்எல்ஏ தரப்பில் எந்த வில்லமும் அளிக்கவில்லை).
இந்நிலையில், பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொன்டு வீடு திரும்பிய கவுன்சிலர் பாக்யராஜை, காரில் வந்து வழிமறித்த (திமுக எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுகிறது) மர்ம நபர்கள், விலாவில் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார்.
பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சியின் போதே பேனர் குறித்து திமுக கவுன்சிலர் பாக்யராஜிடம், திமுக எம்.எல்.ஏ முருகேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.
English Summary
Paramakudi DMK MLA councilor issue