பிரதமர் நரேந்திர மோடியின் இந்த காஷ்மீர் பயணத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீரில் சுமார் 20,000 கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைத்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த காஷ்மீர் பயணத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

"பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீர் பயணம், காஷ்மீரில் போலியான இயல்பு நிலையை முன் நிறுத்துவதற்கான தந்திரம். 2019-ம் ஆண்டு முதல், காஷ்மீரின் அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப இந்தியா பல்வேறு அவநம்பிக்கையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை சர்வதேச சமூகம் கண்டுள்ளது.

இந்தியா இதுவரை, குவார் நீர்மின் நிலையம் குறித்து பாகிஸ்தானுடன் ஒப்பந்த விதிகளை நிறைவேற்றவில்லை.

இரண்டு நீர்மின் நிறைய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதை, 1960-ம்  ஆண்டின் சிந்து நதி நீர் திட்டம் குறித்த ஒப்பந்தத்தின் நேரடி மீறலாக கருதுகிறோம்.

இந்தியா, சிந்து நதி நீர் திட்டத்தின் கடமைகளை நிறைவேற்று வேண்டும். இதற்குத் இயக்கிய விளைவிக்கும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi kashmir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->